< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
செய்யூர் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|14 Jan 2023 2:07 PM IST
செய்யூர் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுசில்குமார். இவரது மகன் சந்தோஷ்குமார் (15) ;
செய்யூர் சால்ட் காலனி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ்குமார் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்காமல் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்யூர் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் சந்தோஷ் குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.