< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்

தினத்தந்தி
|
19 Jun 2022 11:30 PM IST

சங்கராபுரம்,

சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி. 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் உறவினருடன் நின்று கொண்டிருந்த அந்த மாணவி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடக்கவில்லை. இதையடுத்து விசாரித்ததில் மாணவியை மலைபாச்சேரி கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவர் கடத்தி சென்றது தெரிந்தது. இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அஜித் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்