< Back
மாநில செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தினத்தந்தி
|
13 July 2022 12:15 AM IST

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கோபி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் பரிதா நவாப், பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தாசில்தார் நீலமேகம், கவுன்சிலர்கள் சீனிவாசன், செந்தில்குமார், தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்