< Back
மாநில செய்திகள்
பள்ளி அளவிலான செஸ் போட்டி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பள்ளி அளவிலான செஸ் போட்டி

தினத்தந்தி
|
14 July 2022 6:45 PM GMT

கிருஷ்ணகிரியில் பள்ளி அளவிலான செஸ் போட்டி நடந்தது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று நடந்தன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி போட்டிகளை தொடங்கி வைத்தார். செஸ் போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9, 10-ம் வகுப்பும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடக்கிறது. இதில், 325 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் சைமன் ஜார்ஜ், ரமேஷ்பாபு, காசிராஜன், அல்போன்ஸ் ஆல்பர்ட் மற்றும் சிதம்பரம் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளி துணை ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுபவர்கள் வரும் 20-ந் தேதி நடக்கும் வட்டார அளவிலான செஸ் போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்கள் வரும் 25-ந் தேதி நடக்கும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி மற்றும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டிகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்