< Back
மாநில செய்திகள்
கடலூர்: தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - சத்துணவு பணியாளர் காயம்
மாநில செய்திகள்

கடலூர்: தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - சத்துணவு பணியாளர் காயம்

தினத்தந்தி
|
28 Aug 2023 1:39 PM IST

கடலூரில் தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சத்துணவு பணியாளருக்கு காயம் ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சன்னியாசிப்பேட்டை ஊராட்சி பாலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

பள்ளி சமையல் கூடத்தில் பெண் சத்துணவு பணியாளர் உணவு சமைத்துக்கொண்டிருந்தார். இந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இன்று காலை உணவு சமைக்கும் பணியில் சத்துணவு பணியாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது சத்துணவு கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சத்துணவு பணியாளருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்