< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
5 April 2024 4:17 PM IST

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் இருப்பதால் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை.

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. 23ம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது. இதனிடையே வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்