< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி,  வால்பாறை வட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

கன்னியாகுமரி, வால்பாறை வட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
1 Aug 2022 9:45 PM IST

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து நீலகிரி, கன்னியாகுமரிக்கு பேரிடர் மீட்பு குழுவினர், விரைந்துள்ளனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (02.08.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்