< Back
மாநில செய்திகள்
பள்ளி அரையாண்டு விடுமுறை நிறைவு:நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளி அரையாண்டு விடுமுறை நிறைவு:நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரவர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதேபோல் அரசு ஊழியர்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடக்கப்பள்ளிகளை தவிர அனைத்து பள்ளிகளும் செயல்பட உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று சொந்த கிராமங்களில் இருந்து தங்களது கல்வி நிறுவனங்களுக்கு திரும்பினர். இதனால் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் பஸ் நிலையத்திலும் வழக்கத்தை காட்டிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்