< Back
மாநில செய்திகள்
மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை
நாமக்கல்
மாநில செய்திகள்

மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

தினத்தந்தி
|
25 Oct 2023 12:30 AM IST

நாமக்கல் மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்

மோகனூர்:

நாமக்கல் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி திருச்செங்கோட்டில் நடந்தது. போட்டியில் 150 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மேலும் இப்பள்ளி 72 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுடரொளி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்