< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு

தினத்தந்தி
|
15 Nov 2022 12:15 AM IST

மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு கீழ முஸ்லிம் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வட்டாரப் போட்டிகளில் வெற்றி பெற்ற 500 மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பூப்பந்து போட்டியில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதல் பரிசை பெற்றனர்.அவர்களுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த மாணவிகள் அடுத்த மாதம் தர்மபுரியில் நடைபெறும் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர் ராஜா ஆகியோரை கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் லியாக்கத்அலிகான் மற்றும் கல்வி குழு உறுப்பினர்களும் பள்ளியின் தாளாளர் ஷாஜகான் தலைமை ஆசிரியர் அஜ்மல் கான், உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்பட ஆசிரியர்களும். மாணவர்களும் பாராட்டினர்.

Related Tags :
மேலும் செய்திகள்