< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி படுகாயம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி படுகாயம்

தினத்தந்தி
|
3 Nov 2022 11:06 PM IST

சோளிங்கர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார்.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கீழாண்ட‌மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், கூலி தொழிலாளி.

இவரது இரண்டாவது மகள் நிவேதா (வயது 15) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நிவேதா இன்று மாலை வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சென்று போடும் போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் வயர் மீது பட்டது.

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் .படுகாயம் அடைந்த நிவேதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்