திருச்சி
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம்:
தற்கொலை
மண்ணச்சநல்லூர் லெட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் மண்ணச்சநல்லூரில் மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் மோனிஷா (வயது 15). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து, பிளஸ்-1 வகுப்புக்கு செல்ல இருந்தார்.
இந்நிலையில் இவர் வீட்டு வேலை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, வீட்டு வேலைகளை செய்யக்கூடாதா? என்று கேட்டு, அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மோனிஷா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மோனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.