< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
28 April 2023 2:29 AM IST

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகள் சினேகா(வயது 16). சாத்தம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த வந்த இவர், பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்த சினேகாவிடம், அவரது தாய் பிரேமா வீட்டு வேலைகளை செய்யும்படி கூறியுள்ளார். ஆனால் வீட்டு வேலைகளை செய்யாமலும், தாய் பேச்சை கேட்காமலும் இருந்ததால் சினேகாவை பிரேமா கண்டிப்பாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சினேகாவிடம் வீட்டு வேலைகளை செய்யும்படி கூறிவிட்டு பிரேமா வயல் வேலைக்கு சென்று விட்டார். மனம் உடைந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சினேகா, தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையின் இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த பிரேமா, தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது பிரேமா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்