< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
19 Oct 2022 1:46 AM IST

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 13). இவர், கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் அவருக்கு தலைவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது, புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புவனேஸ்வரியின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்