< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூர் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூர் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
25 July 2023 1:46 PM IST

திருவொற்றியூர் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திருவொற்றியூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியான வெள்ளையன் செட்டியார் பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக அவரை பள்ளி தலைமை ஆசிரியர் டி.பஞ்சநாதன் வரவேற்றார். பின்னர் பள்ளியில் உள்ள நூலகம், ஆய்வகம், கழிவறை, சத்துணவு கூடம் மற்றும் மெல்ல கற்கும் மாணவ- மாணவிகளின் கல்வித்திறனை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் கற்றல், கற்பித்தல் சார்பாக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்துரையாடினார்

அப்போது அவருடன் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்