< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரோட்டில் கிழித்து எறியப்பட்ட பள்ளி புத்தகங்கள்! மாணவர்கள் செயலால் அதிர்ச்சி
|30 May 2022 6:43 PM IST
உளுந்தூர்பேட்டையில் மாணவர்கள் பாடப்புத்தகத்தை கிழித்து சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டை,
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு பள்ளியை விட்டு வந்துகொண்டிருந்தனர்.
தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள், தங்கள் கைகளில் இருந்த பாட புத்தகங்களை சாலையில் கிழித்து வீசி எறிந்தனர். அவர்களின் இந்த செயலை கண்ட சாலையில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.