< Back
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
தென்காசி
மாநில செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

தினத்தந்தி
|
30 April 2023 12:15 AM IST

கோவிந்தப்பேரி ஞானம் மறவா நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

கடையம்:

கடையம் அருகே கோவிந்தப்பேரி ஞானம் மறவா நடுநிலைப்பள்ளியில் 70-வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி அல்போன்ஸ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் சேவியர் ஞானம் வரவேற்று பேசினார். ஆசிரியர் சுப்பையா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், துணைத்தலைவர் இசேந்திரன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி, விளையாட்டு போட்டி, தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் வேலம்மாள், சுப்பையா, அபராஜிதன், உத்திராட் ஜெயா, லிங்கசாமி, மாலதி, பிரின்ஸ் ஜோசப், விஜி, பிளாரன்ஸ் சுமதிபாலா, ரஜி ஹனிபர் மற்றும் நாகராஜன், மாரிதுரை, சிவா, மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்