< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கூட ஆண்டு விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பள்ளிக்கூட ஆண்டு விழா

தினத்தந்தி
|
14 April 2023 2:47 AM IST

காரியாண்டியில் பள்ளிக்கூட ஆண்டு விழா நடந்தது.

இட்டமொழி:

காரியாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் எஸ்.கே.சீனிதாஸ், கட்சி நிர்வாகிகள் லிங்கேசன், அருள்ராஜ் டார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்