தென்காசி
பள்ளி ஆண்டு விழா
|பள்ளி ஆண்டு விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் 15-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைைம தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி வரவேற்று பேசினார். விழாவில் பட்டமன்ற சிறப்பு பேச்சாளர் ராமச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஆடிட்டர் நாராயணன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் பெருமாள், பால சரஸ்வதி, திரிகூடபுரம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதம், கராத்தே, யோகாசனம், நாடகம், மேற்கத்திய நடனங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சாமி நன்றி கூறினார்.