< Back
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
தென்காசி
மாநில செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

தினத்தந்தி
|
30 March 2023 12:15 AM IST

பாவூர்சத்திரத்தில், பள்ளி ஆண்டு விழா நடந்தது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடந்தது. கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். வக்கீல் அருள், பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முப்புடாதி தேவி வரவேற்றார். ஆசிரியை பேச்சியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். கவுரவ விருந்தினராக பொன் கணேசன் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர் குமார் முன்னிலையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சந்தியா, தேவி, பொன்மலர், மகாலட்சுமி, மாரிச்செல்வி ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

* சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளியில் 83-வது ஆண்டு விழா, ஜெமிமா மழலையர் தொடக்கப்பள்ளியின் 38-வது ஆண்டுவிழா மற்றும் பள்ளி நிறுவனர் ஜெமிமா அழகுசுந்தரம் 108-வது பிறந்ததினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ், சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை டி.டி.டி.ஏ. பள்ளி தாளாளர் ஜெகன் விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி ஏ.ஜேபஸ்பொன்னையா வரவேற்றார்.

ஜவகர்வால் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொடிமெனிக்கா, ஜெமிமா மழலையர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தங்கமாரி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். முடிவில் முன்னாள் தலைமை ஆசிரியை செல்வராணி ஜேபஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்