< Back
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

தினத்தந்தி
|
6 March 2023 12:15 AM IST

நத்தம் அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.

நத்தம் அருகே அய்யனார்புரத்தில் உள்ள கள்ளழகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 14-வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் ஜான்போஸ்கோ வரவேற்றார். முதல்வர் சக்திவேல் ஆண்டறிக்கையை வாசித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் சின்னத்திரை நடிகர் ஈரோடு சீனு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில் செயல் அலுவலர் நாகேந்திரகுமார் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கில ஆசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்