< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
|18 Feb 2023 12:30 AM IST
நத்தத்தில் ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
நத்தம் ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தாளாளர் ராம்சன்ஸ் ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் சுபசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் தையல்நாயகி வரவேற்றார். விழாவில் பட்டிமன்ற நடுவர் ராமச்சந்திரன், கேந்திரிய வித்யாலயா முன்னாள் துணை ஆணையர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளி முதல்வர் எழில் நன்றி கூறினார்.