< Back
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
தென்காசி
மாநில செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

குட் ஷெப்பேடு பள்ளி ஆண்டு விழா நடந்தது

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆன்டணி பாபு தலைமை தாங்கினார். மேலப்பாளையம் கிங்ஸ் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் முகமது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2021-2022-ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா வாசித்தார். இதைத்தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசினையும், பதக்கங்களையும் சிறப்பு விருந்தினர் முகமது ரியாஸ் வழங்கி, சிறப்புரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து பரதம், நடனம், வரலாற்று நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி லிட்டில் பிளவர் பப்ளிக் சீனியர் செகன்டரி பள்ளி தாளாளர் ஆண்டோ ஜோ செல்வகுமார் கலந்து கொண்டார்.

தலைமை ஆசிரியை நாகூர் மீராள், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பவானி நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்