< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
விஜயதசமியையொட்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
|6 Oct 2022 3:42 PM IST
விஜயதசமியையொட்டி காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
விஜயதசமியையொட்டி காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்ககை நடந்தது. குழந்தைகளுக்கு தானிய கட்டில் உயிர் எழுத்தான 'அ' எழுத்தை எழுத வைத்து பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. விஜயதசமி விழாவில் கல்வியை தொடங்கினால் சிறப்புடன் இருக்கும் என கருதி திரளான பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்க ஆர்வத்துடன் சேர்த்து விட்டு சென்றனர்.
இதில் பள்ளியின் தாளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.