< Back
மாநில செய்திகள்
தமிழ் வழிக்கல்வி இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது
திருப்பூர்
மாநில செய்திகள்

தமிழ் வழிக்கல்வி இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது

தினத்தந்தி
|
22 Jan 2023 10:42 PM IST

தமிழ் வழிக்கல்வி இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் வழிக்கல்வி இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்புக்கூட்டம்

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்புக்கூட்டம் நேற்று திருப்பூர் தென்னம்பாளையம் இளமுகில் வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி தலைமையில் நடைபெற்றது. கல்வித்துறையில் உள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வி வகுப்புகள் இல்லாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கூடி வருகின்றன. எனவே தமிழ் வழிக்கல்வி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும். தமிழ் வழிக்கல்வி வகுப்புகள் இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது. கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக ஏற்று அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திரைப்படங்களுக்கு தடை

அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என்ற வேறுபாட்டின் அடிப்படையில் குழந்தைகளிடம் அறிவாற்றல் மற்றும் கல்வித்திறன் வளர்ச்சியில் இடைவெளி அதிகமாகி வருவதை தடுக்க வேண்டும். பதின்பருவ பிள்ளைகள் நடத்தை சிக்கலுக்கு ஆளாவது அதிகரித்து வருவதால் மது மற்றும் போதைப்பொருள் விற்பனை, வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் திரைப்படங்கள் போன்றவற்றை அரசு தடை செய்ய வேண்டும்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் முழுநேர, நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் வழிக்கல்வி இல்லாத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்கள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதில் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சிவசாமி, சாந்தி, செல்வக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு பார்வையாளர்கள் சுரேஷ்குமார், சாமிநாதன், கருத்தாளர் அய்யாசாமி, கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்