< Back
மாநில செய்திகள்
கொல்லிமலை அரசு நடுநிலைப்பள்ளியில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் மனு
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் மனு

தினத்தந்தி
|
9 Nov 2022 6:45 PM GMT

கொல்லிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம் மலைவாழ் மக்கள் மனு

சேந்தமங்கலம்:

கொல்லிமலை தின்னனூர் நாடு ஊராட்சியில் உள்ள வாசலூர் பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. காலப்போக்கில் மாணவர்களின் வருகை அதிகமானதால் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி அமைந்துள்ள இடம் சுமார் 65 சென்ட் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 25 சென்ட் நிலத்தில் மட்டுமே பள்ளி கட்டிடங்கள் அமைந்துள்ளதாகவும் மற்ற இடங்களில் வீடு மற்றும் மிளகு, காப்பி போன்ற விவசாய பயிர்கள் வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் தெரிவித்து அகற்றி கொள்ள கேட்டபோது வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் நேற்று கொல்லிமலை செம்மேட்டில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த தாசில்தார் ராஜகோபாலிடம் பள்ளியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் மனு கொடுத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் வாசலூர் பட்டி பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதையடுத்து அங்கிருந்து மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்