< Back
மாநில செய்திகள்
போகலூரில் உண்டு உறைவிடப்பள்ளி  தொடங்க அனுமதி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

போகலூரில் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்க அனுமதி

தினத்தந்தி
|
1 Oct 2022 9:12 PM IST

பள்ளிக்கல்வித்துறை சார்பில் போகலூரில் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் போகலூரில் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

மத்திய திட்டக்குழு

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அதன் மத்திய திட்டக்குழு போகலூர் ஒன்றியத்தில் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க அனுமதி அளித்து உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நடைபெறும் இந்த உண்டு உறைவிடப் பள்ளி அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது.

எனவே விருப்பம் உள்ள தொண்டு நிறுவனத்தினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்ககூடிய தொண்டு நிறுவனம் சட்டப்படி பதிவு செய்து இருக்க வேண்டும். ஏற்கனவே அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க கூடாது. வருமான வரிவிலக்கு சான்று பெற்றிருக்க வேண்டும். அரசின் மானியம் பெற தனி அடையாளம், நிரந்தர கணக்கு எண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பங்களை 10.10.22-ந் தேதிக்குள் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.10.22-க்குள் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்