< Back
மாநில செய்திகள்
பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தலைைம ஆசிரியரை பெற்றோர் முற்றுகை
நாமக்கல்
மாநில செய்திகள்

பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தலைைம ஆசிரியரை பெற்றோர் முற்றுகை

தினத்தந்தி
|
26 Aug 2022 11:16 PM IST

பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தலைைம ஆசிரியரை பெற்றோர் முற்றுகை

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் குறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் திடீரென தலைமை ஆசிரியரை அவரது அறையில் வைத்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர், மாணவ, மாணவிகளின் கழிப்பறைகள் சுத்தப்படுத்தாமலும், போதிய அளவு தண்ணீர் இல்லாமல் உள்ளதால் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கழிப்பறையை சீரமைத்து தண்ணீர் வசதி செய்வதுடன் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியர் பெரியசாமி உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்