< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் பாடம் கவனித்த கலெக்டர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் பாடம் கவனித்த கலெக்டர்

தினத்தந்தி
|
22 July 2022 8:45 PM IST

அரசு பள்ளியில் கலெக்டர் பாடம் கவனித்து, பாடம்நடத்தினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வாலாந்தரவையில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட யூதர்கள் காலத்து கல்வெட்டை பார்வையிட சென்றார். அங்கு கல்வெட்டு பற்றி கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு மேற் கொண்டார். 9-ம் வகுப்பில் தமிழ் ஆசிரியை பாடம் நடத்தியதை மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கவனித்துகவனித்து ஆய்வு செய்தார். பின்னர் 10-ம் வகுப்பிற்கு சென்ற கலெக்டர் ஆசிரியராக மாறி உலக வரைபடத்தின் விளக்கங்களை கூறி மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்ட கலெக்டர் நேரடியாக அரசு பள்ளிக்கு வந்து மாணவராகவும் ஆசிரியராகவும் மாறி அறிவுரை கூறியது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்