< Back
மாநில செய்திகள்
வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
திருப்பூர்
மாநில செய்திகள்

வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
11 Jun 2022 10:28 PM IST

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால் வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால் வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நாளை பள்ளிகள் திறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் நாளை வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, கிருமிநாசினி தெளிப்பது, இருக்கை, மேஜைகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அரசு மற்றும் மெட்ரிக்குலேஷன் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் நாளை திறக்கப்படுகிறது.

பள்ளிகள் சுத்தப்படுத்தும் பணி

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் நேற்றே பள்ளிகளை முற்றிலும் சுத்தப்படுத்தும் பணியை நிறைவு செய்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதுபோல் வகுப்பறைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. பள்ளி வளாகம், மைதானம், சத்துணவு கூடங்கள் உள்ளிட்டவை சுத்தப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றது.

நாளை காலை பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் வகையில் அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்