< Back
மாநில செய்திகள்
ஒருவந்தூர் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில்மாற்றுத்திறன் குழந்தைகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

ஒருவந்தூர் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில்மாற்றுத்திறன் குழந்தைகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தினத்தந்தி
|
5 Sept 2023 12:30 AM IST

மோகனூர்:

மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூர் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத்திறன் குழந்தைகளின் சமூக முன்னேற்றம், அவர்களின் நலனுக்காக எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டு தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி கூற ஆசிரியர்கள், மாணவர்கள் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதில் ஆசிரியை கலைச்செல்வி, சிறப்பு பயிற்றுனர் ஆனந்தகுமார், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்