< Back
மாநில செய்திகள்
உதவித்தொகை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

உதவித்தொகை

தினத்தந்தி
|
12 Sept 2022 9:18 PM IST

கொரோனாவால் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை- சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்

விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் முத்துக்குமார் கடந்த 23.7.21 அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை ரூ.25 லட்சம் வழங்கி உள்ளது. இதற்கான காசோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து, இறந்த போலீஸ்காரரின் மனைவி ராஜலட்சுமியிடம், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்