< Back
மாநில செய்திகள்
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை
மாநில செய்திகள்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
7 Jun 2022 7:18 PM GMT

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது பயனாளியின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தினசரி கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல்வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

மேற்கண்ட தகுதிகள் உள்ள இளைஞர்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்