< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
|1 Nov 2022 5:47 PM IST
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கிராம சபை மற்றும் மாநகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திண்டுக்கல் மாநாகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு மேற்கு மிருகநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சுயஉதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.