< Back
மாநில செய்திகள்
தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் -  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
8 May 2023 2:37 PM IST

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டம் செய்லபடுத்தப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

மானியம்

திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com. என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்