< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'2026-ல் தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலும் செங்கோல் வைக்கப்படும்' - எல்.முருகன்
|6 July 2024 8:03 PM IST
2026-ல் தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலும் செங்கோல் வைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தி.மு.க. அரசாங்கம் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சி வருவதற்கு வழி தெரியவில்லை, ஹத்ராஸ் செல்வதற்கு மட்டும் வழி அவருக்கு வழி தெரிகிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு பல உதாரணங்களை நாம் பார்த்துக்கொண்டிருகிறோம். நேற்று கூட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2026-ல் தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலும் செங்கோல் வைக்கப்படும். அதற்கு நாம் கடுமையாக உழைப்போம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.