< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
திண்டுக்கல், பழனியில் சாரல் மழை
|26 Dec 2022 12:30 AM IST
திண்டுக்கல், பழனியில் சாரல் மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பரவலாக பெய்தது. கடந்த ஒருவாரமாக மழை ஓய்ந்திருந்தது. இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் அடித்தது. இந்தநிலையில் திண்டுக்கல்லில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு விட்டுவிட்டு பெய்த சாரல் மழை இரவு வரை நீடித்தது.
இதேபோல் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.