< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி பகுதியில் சாரல் மழை
|11 Dec 2022 12:15 AM IST
கள்ளக்குறிச்சி பகுதியில் சாரல் மழை பெய்தது.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழை நேற்று மாலை வரை விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இதேபோல் சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம், உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் என மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இதில் கீழ்ப்பாடியில் 19 மில்லி மீட்டரும், குறைந்தபட்சம் கச்சராயபாளையத்தில் ஒரு மில்லி மீட்டர் மழையும் பதிவானது.