< Back
மாநில செய்திகள்
பயமுறுத்தும் மர்ம காய்ச்சல்: நெல்லையில் 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்...!
மாநில செய்திகள்

பயமுறுத்தும் மர்ம காய்ச்சல்: நெல்லையில் 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்...!

தினத்தந்தி
|
24 Sept 2022 3:32 PM IST

பத்தமடையில் மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதிலும் ஏராளமான குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின். இவரது மகள் பிரதிக்சா(2).

குழந்தை பிரதிக்சாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பிரதிக்சா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பத்தமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்