< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதி
|6 Dec 2022 1:03 AM IST
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதி
தஞ்சை மாநகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் கரந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை தஞ்சை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக கரந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாமையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு பனிக்குல்லாவும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, கவுன்சிலர்கள் சுமதி, சுகந்தி, மருத்துவ அலுவலர் மணிமேகலை, சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.