< Back
மாநில செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி - இளைஞர் கைது
மாநில செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி - இளைஞர் கைது

தினத்தந்தி
|
14 Jan 2024 6:43 AM IST

பட்டதாரி இளைஞரான கோபி பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கோபி என்பவர் மீது திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பட்டதாரி இளைஞரான கோபி இதுபோன்று பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்