< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விக்கிரவாண்டியில் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
|14 Oct 2023 12:02 AM IST
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் சதா (21). இவர் சதீஷ்குமாரின் உறவினர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை சதீஷ்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதா, சதீஷ்குமாரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப்பதிந்து சதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.