< Back
மாநில செய்திகள்
எஸ்.சி. பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

எஸ்.சி. பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
14 July 2023 2:10 AM IST

எஸ்.சி. பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார். இந்த நிலம் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே இந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி இந்த நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு குப்பன் விற்றுள்ளார். அதன்பிறகு சுப்பிரமணி ராமசாமிக்கு விற்றுள்ளார். இ்வ்வாறு பலர் வாங்கி இறுதியாக இந்த நிலத்தை கடந்த 1990-ம் ஆண்டு பாலிவுட் நடிகை பூஜா பட் வாங்கியுள்ளார். இந்நிலையில் எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "எஸ்.சி., பிரிவினருக்காக வழங்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜாபட் வாங்கியது செல்லாது. இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும்" என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்