< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகையன்று எஸ்.பி.ஐ. தேர்வு; தேதியை மாற்றக்கோரி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கடிதம்
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையன்று எஸ்.பி.ஐ. தேர்வு; தேதியை மாற்றக்கோரி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கடிதம்

தினத்தந்தி
|
7 Jan 2023 5:52 PM IST

தேர்வை வேறு தேதிக்கு மாற்றி புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளான ஜனவரி 15-ந்தேதி எஸ்.பி.ஐ. வங்கி பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பொங்கல் பண்டிகையன்று எஸ்.பி.ஐ. வங்கித் தேர்வு நடைபெற உள்ளதாக வெளியான அறிவிப்பு தேர்வர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியிருப்பதாகவும், தேர்வை வேறு தேதிக்கு மாற்றி புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்