< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"நீங்க தான் கமிஷனராச்சே..என் புள்ளைய திரும்ப கொடுங்களேன்" - சத்திய பிரியாவின் தாய் கதறல்
|14 Oct 2022 3:27 PM IST
"நீங்க தான் கமிஷனராச்சே..என் புள்ளைய திரும்ப கொடுங்களேன்" என போலீஸ் கமிஷனரின் காலில் விழுந்து சத்தியாவின் தாய் கதறியது காண்போரை கண்கலங்க செய்தது.
சென்னை,
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில் முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சத்திய பிரியாவின் வீட்டுக்கு வந்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது சத்யாவின் தாய், எங்கள் குடும்பம் போலீஸ் குடும்பம் என சொல்லுவார்களே தற்போது என் குடும்பத்திலேயே இப்படி நடந்துவிட்டதே என கண்ணீர் மல்க கூறினார். தொடர்ந்து என் மகள் என்ன தவறு செய்தார். எங்களை பார்க்க வீடு தேடி வந்துள்ளீர்கள், ஆனால் என் மகள் இல்லையே. என் புள்ளை என்ன தவறு செய்தது. எப்படியாவது என் மகளை கொடுங்க ஐயா என கதறினார். அந்த பையனை ஏதாவது செய்ய வேண்டும் என கூறி சங்கர் ஜிவாலின் கால்களை பிடித்து அழுதார் லரலட்சுமி. இதனை பார்த்த அங்கிருந்தவர்களின் அனைவரின் கண்களும் குளம்போல் காட்சி அளித்தது.