தூத்துக்குடி
உடன்குடி, ஆலந்தலை பகுதியில் சனிக்கிழமை மின்தடை
|உடன்குடி, ஆலந்தலை பகுதியில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், ஆலந்தலை மெயின்ரோடு, சுனாமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், சுனாமி நகர், அண்ணா நகர், பிலோமி நகர், அடைக்கலாபுரம் - ஆறுமுகநேரி ரோடு, நைனார்பத்து, சீர்காட்சி, முதலூர் ஏபி நகர், கருவேலம்பாடு, வீராக்குளம், மடத்துவிளை, பிரண்டார்குளம், உடன்குடி, கடாச்சபுரம், அன்பின்நகரம், மெய்யூர், வெங்கட்ராமானுஜபுரம், செட்டிவிளை, பெரியதாழை, தோப்புவிளை, இடைச்சிவிளை ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.