< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
சத்தியமங்கலத்தில் ரூ.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
|25 Aug 2022 2:46 AM IST
சத்தியமங்கலத்தில் ரூ.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், கடத்தூர், பண்ணாரி, கொத்தமங்கலம், புதுபீர்க்கடவு, ராஜன் நகர், கொளத்தூர், டி.ஜி.புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் 2,300 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி 9,585 ரூபாய் முதல் 11 ஆயிரத்து 866 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 61 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. சத்தியமங்கலம், கோபி, அவினாசி, திருப்பூர், கோவை பகுதி வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்து சென்றார்கள்.