< Back
மாநில செய்திகள்
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
8 Feb 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் பி. தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகை, செல்வி, மாநில துணை தலைவர் கனகவேல், இணைச் செயலாளர் சாரதா மற்றும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியுடன் ரூ.6,750 ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை தகுதி, பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து நியமிக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டம் மூலம் தமிழக அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்