< Back
மாநில செய்திகள்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Feb 2023 10:41 PM IST

வேலூர், அணைக்கட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் ஒன்றிய தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கமலாதேவி வரவேற்றார். நிர்வாகிகள் ரம்பா, லலிதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் மல்லிகா பேசினார். ஆர்ப்பாட்டத்தை பொருளாளர் முருகன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலை படியுடன் ரூ.6,750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்ததை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் சகாயமேரி நன்றி கூறினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அணைக்கட்டு ஒன்றிய சத்துணவு அங்கன்வாடி அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.

மேலும் செய்திகள்