பெரம்பலூர்
சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு
|கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி வரை கிளர்ச்சி பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். 26-ந்தேதி மாநில அளவில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பாலக்கரையில் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி திருச்சியில் நடைபெறும் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில மாநாட்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.